அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இவரை தூக்கிவிட்டு முதல்வர் பதவியில் பழனிச்சாமியை அமர வைத்துவிட்டு சிறைக்கு போனார் சசிகலா.
அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் நடந்துகொண்டது பிடிக்காமல் அவரை கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தனது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிச்சாமி.
எனவே, தனித்து விடப்பட்டார் ஓபிஎஸ். அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக தோற்க காரணமாக இருந்தார். அதன்பின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் விட பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.
ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா நினைத்தார். செங்கோட்டையன் மூலம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சி எடுத்தார். எனவே, எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் இருந்தார் ஓபிஎஸ். நேற்று சென்னை வந்த அமித்ஷாவை சந்தித்து இதுபற்றி பேச பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால், அமித்ஷா அவரை சந்திக்கவே இல்லை.
தற்போது அதிமுக – பாஜக கூட்டணியை அறிவித்தும் விட்டார் அமித்ஷா. அதோடு, ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் அதிமுகவில் இணைவது என்பது கட்சியின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம் எனவும் சொல்லிவிட்டார். அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்றோரை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என பழனிச்சாமி சொல்லிவிட்டதுதான் அதற்கு காரணம்.
எனவே, அதிமுகவோடு இணைவோம் என்கிற பன்னீர் செல்வத்தின் கடைசி நம்பிக்கையும் பொய்த்துவிட்டது. எனவே, இனிமேல் அவர் தனிக்கட்சிதான் துவங்குவார் என்கிறார்கள் சிலர். ஓ.பி.எஸ் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை…
உங்களுக்கு தோன்றுவதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்!…