விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

0
80

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் விஜய். கடைசியாக ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அனுதினமும் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நடந்த முதல் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எப்போதும் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என்றும், கொள்கை எதிரி பாஜகவுடனும், அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளை கவரும் வகையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கூட்டணி கொள்கைகளையும் விஜய் வெளியிட்டார். இதனால் எந்நேரத்திலும் சிறு கட்சிகள் விஜய்யின் கூட்டணிக்குள் வந்துவிடும் நிலை தற்போது அரசியலில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொண்டு தான் வருகிறேன். விஜய்யின் அரசியல் நகர்வுகள் சிறப்பாக உள்ளது என்றும், அவருக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் பேட்டி கொடுத்துள்ளார் ஒபிஎஸ். விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இவரே மீண்டும் அங்கு சென்றாலும் எடப்பாடி இவரை சேர்த்துக்கொள்ள மாட்டார். அதேபோல பாஜகவுடன் இணக்கமாக ஓபிஎஸ் இருந்தாலும் ஓபிஎஸ் பாஜக சேர எடப்பாடி விடமாட்டார். திமுகவுடனும் இவரால் கூட்டணிக்கு செல்ல முடியாது. சீமானுடன் சென்றால் டெபாசிட் கூட தேறாது. இந்த காரணங்களால் தான் ஓபிஎஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அரசால் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். ஓபிஎஸ் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது, அவருக்கும் ஜாதி ரீதியான வாக்குகள் அதிக அளவில் இருக்கு என்றும் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleYoutube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?
Next articleமலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?