ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!
அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா.
அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.க வின் காவல் தெய்வமாக இருந்தார்.
அ.தி.மு.க வில் அமைப்பு ரீதியான தேர்தலை தொண்டர்களுக்கான உரிமையை அளித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடத்தினார்கள். ஆனால் இன்று சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்ட விதிகளை மதிக்காமல் புதிதாக சட்டத்தை உருவாக்கி தேர்தலை நடத்தி உள்ளார்கள்.
எம்.ஜி.ஆரை தி.மு.க விலிருந்து நீக்கிய பிறகு அவருக்கு இருந்த எண்ணத்தின் அடிப்படையில் தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என சட்ட விதியை உருவாக்கினார்.
ஜெயலலிதா அதனை பின்பற்றியதால் தான் அவருக்கான உச்சபட்ச மரியாதையாக அவருக்கு நிரந்தர பொதுச்செயலாளராக தொண்டர்கள் அறிவித்தார்கள். அந்த மரியாதையை ரத்து செய்துள்ளது இந்த சதிகார கூட்டம்.
நான் மட்டும் பெரியாரின் பேரன் அல்ல அ.தி.மு.க வில் இருக்கும் ஒன்னறை கோடி பேரும் பெரியாரின் பேரன் தான்.
நாம் மீண்டும் தொடங்கிய தர்ம யுத்தம் எந்த வித பிசுறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இறுதியில் நாம் தான் வெற்றி அடைய போகிறோம்.
நம்முடைய சக்தியை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் மாநாடு இருக்கும். அதற்கு முன்னுரை எழுதும் கூட்டம் தான் இந்த கூட்டம்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நம் பலத்தை காட்டுவோம். அது நம் எண்ணம் செயல் எதுவாக இருந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நாம் செல்வதற்கு மாநாடு அடித்தளமாக இருக்கும் என்றார்.