முன்னாள் முதலமைச்சர் அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றிய வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் தொண்டர்களோ பொதுமக்களோ பயப்பட வேண்டாம் என்றும் பன்னீர்செல்வம் அவர்களில் சாதாரண மருத்துவ சிகிச்சை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கணபதி நகரில் உள்ள ஆர் கே நேச்சர் கியர் ஹோம் என்று மருத்துவமனையில் சேர்ந்து முதுகுவலிக்கான சிகிச்சை ஒவ்வொரு வருடமும் பெற்று வருவதாகவும், அதேபோல தான் இந்த வருடமும் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்த தருணத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அவரை சந்தித்து கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் இணைவார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இவர் மருத்துவமனையில் சென்று சேர்ந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொறுப்பில் அதிமுக சரணடைந்தது. அதனைத் தொடர்ந்து அதிமுகவில் பன்னீர்செல்வம் இணைவதற்கான பல முயற்சிகளை செய்தும் எடப்பாடி முழுவதுமாக மறுக்கவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி மூலமாக ஆவது அதிமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என பன்னீர்செல்வம் நினைத்திருந்த நிலையில் ஏன் திடீரென மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்காமல் மருத்துவமனையில் சேர்ந்தார் என பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.