சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கவிருக்கும் துணை முதல்வர்! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

தமிழகத்திலேயே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.அந்த வகையில், தன்னுடைய கட்சி வேட்ப்பாளர்களையும் மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தன்னுடைய கட்சி வேட்பாளர்களின் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.இப்படி சிறிய கட்சி முதல் பெரிய கட்சி வரை அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இதுவரையில் பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் அமைதியாக இருந்து வந்த ஓபிஎஸ் நாளை முதல் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நாளை முதல் வரும் 21ஆம் தேதி வரை தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். அவர் அடுத்த நான்கு தினங்களில் மொத்தமாக 21 இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் பிரசாரத்தை நடத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பதினெட்டாம் தேதி அதாவது நாளையதினம் திருவொற்றியூர் தேரடி வீதியில் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். அதோடு மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, போன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறார்.

அதோடு வரும் வெள்ளிக்கிழமை ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், வேளச்சேரி போன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று சைதாப்பேட்டை, தியாகராயநகர், அண்ணா நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஆர்.கே. நகர் ராயபுரம் துறைமுகம், எழும்பூர் திருவிக நகர் போன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

அதேபோல வரும் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராணிப்பேட்டை பகுதியில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்குகிறார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அங்கேயே தொடங்கி அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கர், வேலூர், காட்பாடி அணைக்கட்டு ஆற்காடு போன்ற பகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள வருகிறார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.