சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!

0
80

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து அதன் பிறகு தன்னுடைய சொந்த ஊராக இருக்கும் திருவாரூரில் இருந்து நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.

திருவாரூரில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் அந்தப் பிரச்சாரத்தை சேலம் மாவட்டத்தில் முடித்திருக்கிறார் திருச்செங்கோடு நாமக்கல் போன்ற சட்டசபைத் தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்த அவர் அந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியாக இருந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் பாண்டியனை ஆதரிக்கும் விதமாக அந்த பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்த அவர் நடைபயணமாக சென்று பொதுமக்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் போன்ற இடம் வாக்கு சேகரித்தார். பூமார்க்கெட் காமராஜர் சிலை மற்றும் பெரியார் சிலை நெடுஞ்சாலை வெள்ளை விநாயகர் கோவில் சந்திப்பு கிழக்கு ரத வீதி மாநகராட்சி பின்புறம் இருக்கின்ற ஆர் எஸ் சாலை வழியாக கணேஷ் திரையரங்கம் சந்திப்பு வரையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

இந்தப் பிரச்சாரத்தின் பொழுது திமுக தொண்டர்கள் பெண்கள் இளைஞர்கள் என்றது திரளான மக்கள் ஆர்வத்துடன் ஸ்டாலினுடன் நடைபயணம் மேற்கொண்டு கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதற்காக முயற்சி செய்தார்கள். அந்த சமயத்தில் அவர்களுடன் புன்னகையுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.