பிரதமரை சந்திக்கும் அதிமுகவின் தலைமை! நிறுத்தப்படுமா கர்நாடகா மேகதாது திட்டம்?

Photo of author

By Sakthi

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் நேற்றைய தினம் திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக அவர் டெல்லிக்குச் சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு சென்று இருக்கின்றார்.அவர் ஓபிஎஸ் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை 11 மணி ஐந்து நிமிடத்திற்கு சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கர்நாடக மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும், மற்றும் உள்ளாட்சி தேர்தல் தற்சமயம் இருக்கின்ற தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் கொடுக்கப்படாததால் பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருடன் உரையாற்றுவதற்காக வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக மக்களின் சார்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், அதற்கு மத்திய அரசு செவிசாய்த்து அதற்கான சூழ்நிலை தற்போது இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏனென்றால் என்னதான் ஒரு முதலமைச்சர் என்ற முறையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கையை வைத்திருந்தாலும் கூட அவரை பெரிய அளவில் பிரதமர் நரேந்திரமோடி மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் அவர் வைத்து கோரிக்கையும் வெறும் சம்பிரதாயமாகவே மட்டும் இருக்கும் என்று தெரிகிறது.ஆனால் தற்போது அதிமுக சார்பாக வைக்கப்படும் கோரிக்கையானது நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. ஒருவேளை திமுகவின் கோரிக்கை நிறைவேற்றப்படும் ஆனால் அது நிச்சயமாக திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய இழுக்காகவே பார்க்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே இன்றைய நரேந்திர மோடியின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.