பெட்ரோல் டீசல் விலைக்கு நங்கூரம் இட்ட எண்ணெய் நிறுவனங்கள் செம குஷியில் வாகன ஓட்டிகள்!

0
84

இந்தியாவைப் பொறுத்த வரையில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது.

நாட்டில் நோய் தோற்று பரவல் அதிகரித்ததை அடுத்து மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு கட்டமையாக்கப்பட்டது இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் ஏற்றி வருகின்றன.

இந்தநிலையில், தொடர்ச்சியாக பத்தாவது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் ஆனது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.