யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

Photo of author

By Rupa

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார்.

அதே போல நாளை தமிழர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் நிலையில் காபந்து முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் அதில் கூறியிருப்பது,தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ் பெருமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.தமிழ் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் நலமும் வளமும் பெருகட்டும் என கூறியுள்ளார்.

மக்கள் இந்த யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை மிகவும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.கோவில்களுக்கு செல்லும் போதும் பொது இடங்களுக்கு செல்லும் போது அரசு கூறிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.அதே போல அரசு கூறிய 50% விழுக்காடு கொண்ட மக்களை மட்டுமே அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்,அதேபோல இன்று மற்றும் நாளை விசேஷ நாள் என்பதால் கூட்டம் கூடும் இடங்கள் அனைத்தும் அரசு கூறிய நடவடிக்கைகளுக்கு ஒத்துளைப்பு தர வேண்டும்.