அரசு பள்ளியில் ஆபாச நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ!
பீகார், நவாடா மாவட்டத்தில் உள்ள தேகாமா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. மக்களுக்கு தனியார் பள்ளிகளின் மேல் எப்போதுமே ஒரு மோகம் உண்டு. பெற்றோர்களாகிய தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் குழந்தைகளாவது தனியார் பள்ளியில் படிக்க வேண்டும், நன்றாக ஆங்கில புலமை வேண்டும் என பல பெற்றோரும் தங்களது நிலைமையை மீறி குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் இப்போது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் எல்லாவிதத்திலும் மேம்பட்டு அரசு பள்ளியே சிறந்தது என எல்லோராலும் கூறப்படுகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், தற்போது பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் முன்பு மோசமான அசைவுகளுடன் பெண்கள் நடனமாடினர். இந்த வீடியோ இணையதளங்களில் பரவியதை தொடர்ந்து பெரும் சர்ச்சையாக மாறியது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்