ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது!!

0
196
ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது..
ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது..

ரேஷன் அட்டைதாரர்களே இனி ஒருத்தரும் “கை “ வைக்க முடியாது! 

தமிழக அரசால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசு பொருட்களால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க படுகிறது.

தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ரேஷன் அரிசி விற்கபடுவது அதிகமாகிவிட்டது. சிலர் முறைகேடாக கள்ளசந்தையில் விற்று அதிக லாபம் பெறுகின்றன.

கள்ளசந்தையில் விற்கும் நபர்கள் 1980ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு உள்ளனர், கடந்த ஒரே மாதத்தில் மட்டும் கள்ளசந்தையில் விற்க கடத்த முயன்ற, ரூ.1,06,20,066/- மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்செய்துள்ளனர்.

கள்ளசந்தையில் விற்க கடத்த முயன்ற 546 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு சார்பில் புகார் எண் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது 1800 599 5950 தெரிவிக்கலாம்.