சேலம் மாவட்டம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்!

Photo of author

By Savitha

சேலம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம். சேலம் கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதால் சர்ச்சை.

சேலம் எடப்பாடி அருகே கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர்.

ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை.இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்கென இருக்கும், ஆடல் பாடல் குழுவினரை வைத்து, நிகழ்ச்சியை நடத்தினர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஆடியவர்கள் ஆபாசமாக ஆடுவதாகவும். குத்தாட்டம் போடுவதாகவும், மேலும் நடன நிகழ்ச்சியில் ஆபசமாகவும், பெண்களை கேலியாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பது முகம் சுளிக்க வைத்தது.எனவே இது குறித்து உரிய விசாரணை நடந்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.