இந்தியாவில் ஒரே நாளில் 67,708 பேருக்கு பாதிப்பு! அக். 15 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
196

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 67,708 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,07,098 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 608 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,11,266 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81,514 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 63,83,442 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 87.35% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 8,12,390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 11,36,183 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,12,26,305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous article8 கி.மீ. சாலை அமைப்பதால் 80 கி.மீ. சுற்றிவர தேவையில்லை! அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய மக்கள்!
Next articleஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here