ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

0
85

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 3.25 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் என்பவர்  கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஓசூர், தர்மபுரி,வாணியம்பாடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியில் இடுப்பட்டுள்ளார் . அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட செயல்களில் பல அதிகாரிகள் உழல் இடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனை பயன்படுத்தி பொறியாளர் பன்னீர்செல்வமும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இவரது சொந்த வீடு ராணிப்பேட்டையில் இருந்த நிலையில், வேலூர் மாவட்டம் காஞ்சி நகரில் வாடகை வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்ததனை அதிகாரிகள் அறிந்தனர். அதன் அடிப்படையில் காந்தி நகரில் அமைந்துள்ள இவரது வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தித்தியதில் லஞ்சம் வாங்குவதற்காகவே வாடகை வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது . அங்கிருந்து சுமார் ரூபாய். 3.25 கோடி பணமும் 3.6 கிலோ தங்கம்,மற்றும் 10 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது. மேலும் நில ஆவண பத்திரிக்கைகள், லஞ்சம் மூலமாக பெற்ற கார் ஆகிய அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra