11 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..!! தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..??

0
144

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 11,018 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,859 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை 6,79,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 26,356 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 72,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 97,32,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை 1,97,751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 3,616 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 135 என மொத்தம் 201 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Previous articleஉடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்…! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…!
Next articleஅதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!