சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,761,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 27,673,862 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,020,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 67,945 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,066,956 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,833,763 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,025,193 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 2,590,832 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14,653 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 217,738 பேர் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,906,151 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,906,069 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 893,561 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8,944 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 106,521 பேர் ஆக உயர்ந்துள்ளது.