அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
63

நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் வரும் 15ம் தேதி முதல் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • பொழுதுபோக்கு பூங்காக்களை தினசரி திறப்பதற்கு முன்பு பூங்காக்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும்.
  • பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை.
  • பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள உணவகங்களில் 50% பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
  • பொழுதுபோக்கு பூங்காக்களில் அதிக அளவிலான பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கர்ப்பிணி பெண்கள், 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.
  • பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொழுதுபோக்கு பூங்காவிற்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K