ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! இரண்டு விதமான இந்திய அணி அறிவிப்பு!!!
ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை இரண்டு விதமாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஆஸ்திரேலியா அணி மற்றும் இந்திய அணி இரண்டும் மோதும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகும்.
எனவே இந்த ஒருநாள் தொடரில் வென்று வெற்றி பெற்ற உற்சாகத்துடன் உலகக் குப்பைத் தொடருக்கு செல்ல வேண்டும் என்று இரண்டு அணிகளும் நினைத்து விளையாடும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
அதன்படி செப்டம்பர் 22ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 24ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறுகின்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகின்றது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் தற்பொழுது பிசிசிஐ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இரண்டு விதமாக அறிவித்துள்ளது.
அதாவது ஆஸ்திரேலியாவுடன் விளையாட இருக்கும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியையும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியை ரோஹித் சர்மா தலைமையிலும் அறிவித்துள்ளது.
கே.எல் ராகுல் தலைமையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியை ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணியை அறிவித்துள்ளது.
கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி…
கே.எல் ராகுல்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா(வைஸ் கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சூரியக்குமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஷர்தல் தக்கூர், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ரவி அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி…
ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, விராட் கோஹ்லி, சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியக்குமார் யாதவ், கே.எல் ராகுல்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஷர்தல் தக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவி அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்