தொடர் மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் : அதிகாரிகள் அலட்சியம்!!

0
34
#image_title

தொடர் மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் : அதிகாரிகள் அலட்சியம்!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதியடித்துள்ளனர்.

தற்போது ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் மதுரை, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இனி மழைக்காலம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மலைக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் மழை நீர் சாலைகளில் வடிய வழியில்லாமல் சாலைகளிலே தேங்கியுள்ளது.

அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டாலும், நகராட்சி பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளில் குறுகலான தெருக்களில் கூட மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொது மக்களும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ!.. எதிர்க்கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களோ!.. இது குறித்துக் கண்டு கொள்வதில்லையே என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

சாலைகளும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகிய நிலையில் தற்போது மழைநீரும் சாலைகளில் தேங்கியுள்ளதால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், மெட்ரோ பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் ஆங்காங்கே தோண்டப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை சகதியாகவும், வெள்ளக் காடாகவும் காட்சியளிக்கிறது. இதனை அதிகாரிகள் உடனே கவனத்தில் கொண்டு சீர்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K