விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! 

0
39
#image_title

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!!

விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று(செப்டம்பர்18) நிறைய சினிமா அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல திரைப்படங்களின் விநாயகர் சதுர்த்தி போஸ்டர்கள், டீசர் குறித்த அறிவிப்பு, டிரெய்லர் குறித்த அறிவிப்பு, ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு என்று மலை மலையாக சினிமாஅப்டேட்டுகள் குவிந்துள்ளது. அது என்னென்ன தகவல்கள் என்று பார்க்கலாம்.

* நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் கன்னட போஸ்டரை படக்குழு நேற்று(செப்டம்பர்18) மாலை வெளியிட்டது. துப்பாக்கியில் நடிகர் விஜய் அவர்களின் புகைப்படம் இருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்த போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

* நடிகை திரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள தி ரோட் திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு நேற்று(செப்டம்பர்18) வெளியிடப்பட்டது. அதன்படி தி ரோட் திரைப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. தி ரோட் திரைப்படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார்.

* நடிகர் ரன்பீர் கபூர் நடித்து வரும் அனிமல் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு நேற்று(செப்டம்பர்18) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனிமல் திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 28ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.

* நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் எம். ராஜேஸ் இயக்கத்தில் உருநாகவுள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று(செப்டம்பர்18) வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ஃப்ரதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

* நடிகை நயன்தாரா அவர்கள் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பும் நேற்று(செப்டம்பர்18) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு மண்ணாங்கட்டி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யூடியூப் பிரபலம் டூட் விக்கி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

* நடிகர் மோகன்லால் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று(செப்டம்பர்18) அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் 2024ம் வருடம் ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ளது.

* நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில உருவாகி வரும் பார்க்கிங் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. முன்பு செப்டம்பர் 28ம் தேதி பார்க்கிங் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று(செப்டம்பர்18) நோ பார்க்கிங் என்று புதிய போஸ்டரை ரிலீஸ் செய்து பார்க்கிங் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டரை நேற்று(செப்டம்பர்18) வெளியிட்டது. இந்த படத்திற்கு கான்ஜுரிங் கண்ணப்பண் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சதீஸ் நடிக்கின்றனர். இயக்குநர் செல்வின் ராஜ் எக்ஸேவியர் கான்ஜுரிங் கண்ணப்பண் திரைப்படத்தை இயக்குகிறார்.

* செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கப் போகும் திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் முதல் பார்வை போஸ்டர்கள் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று நேற்று(செப்டம்பர்18) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

* நடிகர் டைகர் ஷெராப் நடிக்கும் கண்பத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று(செப்டம்பர்18) புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி கண்பத் திரைப்படம் அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ளது. கண்பத் திரைப்படத்தை இயக்குநர் விகாஷ் பாஹ்ல் இயக்கியுள்ளார்.

* நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தின் புதிய போஸ்டரும், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடைய தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் திரைப்படத்தின் புதிய போஸ்டரும், நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படத்தின் புதிய போஸ்டரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளோடு நேற்று(செப்டம்பர்18) வெளியிடப்பட்டுள்ளது.