இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! 18 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்பொழுது அறிவித்து உள்ளது.
உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் செப்டம்பர் 22ம் தேதி துவங்குகிறது. அதன்படி செப்டம்பர் 22ம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், 24ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், 27ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி:
01. பேட் கம்மின்ஸ்(கேப்டன்)
02. சீன் அப்பாட்
03. அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்)
04. நாதன் எல்லிஸ்
05. ஜோஸ் ஹேசல்வுட்
06. கேமரூன் கிரீன்
07. ஜோஸ் இங்கிலிஸ்
08. மேட் ஷார்ட்
09. ஸ்பென்சர் ஜான்சன்
10. மார்னஸ் லபுஷேன்
11. மிட்செல் மார்ஷ்
12. கிளென் மேக்ஸ்வெல்
13. தன்வீர் சங்கா
14. ஸ்டீவ் ஸ்மித்
15. மிட்செல் ஸ்டார்க்
16. டேவிட் வார்னர்
17. ஆடம் சாம்பா
18. மார்கஸ் ஸ்டோய்னஸ்