டிவிஎஸ் மோட்டார் அறிவித்த சலுகை! ரூ.5000 வரை தள்ளுபடி! முந்துங்கள்!

Photo of author

By Kowsalya

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மோட்டார் சைக்கிளின் மாடல்களை குறைந்த விலைக்கு தந்து வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் ஒரு சில இருசக்கர வாகனங்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 5 ஆயிரம் வரை சேமிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. மேலும் இத்துடன் 100 சதவீத நிதி சலுகை மற்றும் மாத தவணை வசதி ரூ.1555 வழங்குகிறது.

இது எந்த வகையான இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றால் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ், ரேடியான், ஸ்போர்ட் மாடலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மூன்று மாடல்களிலும் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எஞ்சின் 8.08 பிஎச்பி பவர் 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் 10 லிட்டர் ஃப்யூவல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதற்கு முன் டிவிஎஸ் நிறுவனம் தனது வாகனங்களுக்கான இலவச சர்வீஸ் சேவையை ஜூன் 30 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்ட நீங்கள் டிவிஎஸ் மோட்டார் வாகனங்களை குறைந்த தொகையில் பெறலாம். மேலும் மாத அவனையும் மிகக் குறைந்த விலையிலேயே அளித்து வருகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.