இன்று முதல் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் சேல்!! நிறுவனம் அதிரடி தள்ளுபடி!!
அமேசான் என்பது அமெரிக்க நிறுவனம் ஆகும். அமேசான் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் பெரும்பாலும் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது அமேசான் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 76 வது சுதத்திர தினத்தையொட்டி அமேசான் தனது தளத்தில் சிறப்பு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து அமேசான் விற்பனையில் க்ரேட் ப்ரீடம் சேல் திருவிழா ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பல உபகரணங்கள், அணியக்கூடிய பொருட்கள், ஆடைகள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற இன்னும் பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
அதனையடுத்து அமேசான் ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்டுத்தி 10 சதவீதம் சேமிக்க முடியும் என்ற அறிவிப்பையும் அறிவித்துள்ளது. மேலும் வீடிற்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் 65% வரை தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்து.
இந்த செய்தி அமேசான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மலிவான விலையில் பல பொருட்களை வாங்கும் வசதி உள்ளது. அதேபோல் ஈபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி பணம் செலுத்துவதில் 10% சதவீதம் சேமிக்கலாம்.
மேலும் பல்வேறு ஸ்மார்ட் போன்கள் சலுகை விலையில் கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒருநாள் முன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்திருந்து. இந்த தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளுமாறு அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.இன்று முதல் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் சேல் தொடங்குகிறது.