புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

Photo of author

By Amutha

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

Amutha

officials-who-did-not-see-the-complaint-screaming-and-running-because-of-what-the-person-did-in-rage

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

தனது புகாரை கண்டுக் கொள்ளாத அதிகாரிகளுக்கு ஆத்திரத்தில் நபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி அந்த நபர் தனது வீட்டினுள் புகுந்த பாம்பினை பிடித்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கானா மாநிலத்தில் பருவமழை காரணமாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தெலுங்கானா ஐதராபாத் நகரில் ஆல்வால் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அவரின் வீட்டுக்குள் புகுந்த பாம்பினை பிடித்து வந்து கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். தனது புகாரை கண்டுக் கொள்ளாத ஆத்திரத்தில் அந்த நபர் இந்த செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இதுபற்றிய விவரங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.

https://twitter.com/VikramGoudBJP/status/1684157092893192194?s=20