அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

Photo of author

By Gayathri

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

Gayathri

Updated on:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வரக்கூடிய பல முடிவுகள் உலக நாடுகளை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. அவ்வாறு தான் தற்பொழுது தங்கள் நாட்டின் மீது 100 சதவீத வரி விதிப்பை வழங்குகிற நாடுகளின் மீது அமெரிக்கா அரசும் தங்களுடைய வரி விதிப்பை அதிகரிக்க இருப்பதாக ஏப்ரல் 2 ஆம் தேதி தெரிவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஆட்டோ மொபைல்ஸ் துறையில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தாழ் காரின் உபரி பாகங்கள் வாங்குவதில் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் வரிவிதிப்பால் உயரப்போகும் பொருட்களின் விலை மற்றும் விவரங்கள் :-

✓ லத்தீனிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய காபி கொட்டைகளுக்கு அறிவிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் லத்தீன் மட்டுமின்றி காபி கொட்டைகளை இறக்குமதி செய்யக்கூடிய கொலம்பியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கும் அதிக வரி விதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

✓ கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாக்லேட் தயாரிப்பதற்கான கோகோ பீன்ஸ், கோட் டி’ஐவோயர், ஈகுவடார் போன்றவற்றிற்கும் வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

✓ இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கோகோ வெண்ணைக்கும் வரிவிதிப்பு 30 முதல் 20% வரை அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது.

✓ சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காலணிகளுக்கும் 54% வரை வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது.

✓ ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின் பாட்டில்களுக்கு 20% வரை வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது

✓ அமெரிக்காவிற்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளான வங்கதேசம் 37%, கம்போடியா 49%, இந்தியா 26%, இந்தோனேசியா 29% மற்றும் பாகிஸ்தான் போன்றவற்றிற்கு வரிவிதிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

✓ முக்கியமாக அமெரிக்காவில் வாங்கக்கூடிய கார்களின் விலைகளில் 2000 முதல் 5000 வரை டாலர்களின் அளவு உயர்ந்ததோடு விலை உயர்ந்த கார் வாங்க நினைப்பவர்களுக்கு 20,000 டாலர்கள் வரை அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.