குழந்தை பருவத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் மட்டுமே வளரும் பொழுது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதில் பெற முடியும்.உணவின் மூலமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.அப்படி இருக்கையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க ஆரோக்கிய உணவுமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
ஆனால் இன்று நேரமின்மை காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அலட்சியத்தை காட்டுகின்றனர்.தாங்கள் உட்கொள்ளும் உணவையே குழந்தைக்கும் கொடுக்கின்றனர்.குறிப்பாக காலை நேர பானமான தேநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குகின்றனர்.
சிலர் குழந்தைகளுக்கு டீ,காபி குடிப்பதால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல் பாதிப்புகளுக்கு தேநீர் கொடுப்பது நல்லது என்று நினைப்பது தவறு.
நாம் எடுத்துக் கொள்ளும் தேநீரில் காஃபின் என்ற இரசாயனம் நிறைந்து காணப்படுகிறது.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஒரு கெமிக்கலாகும்.இந்த கெமிக்கல் குழந்தைகள் உடலில் சென்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
காஃபின் பானங்களை பருகும் குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகரிக்கும்.அதிக டீ குடிக்கும் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.அதிக டீ குடிக்கும் குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
தலைவலி,எரிச்சல்,பசியின்மை போன்ற பல பாதிப்புகள் இதனால் ஏற்படும்.டீ குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் நிலை ஏற்படும்.இதனால் உடலில் நீர்பற்றாக்குறை உண்டாகி கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
அதிக டீ குடிக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு,கால்சியம் சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.