அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

Photo of author

By Divya

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

Divya

நாம் சாப்பிடும் கனிகளில் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி சத்து கொண்டவையாக உள்ளது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

நெல்லிக்காய் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.செரிமான ஆரோக்கியம் மேம்பட நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்.

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.ஆனால் நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு,வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நெல்லிக்காயை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை உண்டாகும்.பால் மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் சேர்த்து உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.சிலர் நெல்லிக்காயில் உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள்.இப்படி நெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலில் உப்பு சத்து அதிகமாகிவிடும்.

நெல்லிக்காயை பகலில் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.இரவு நேரத்தில் நெல்லிக்காய் உட்கொண்டால் உடல் மந்தப் பிரச்சனை ஏற்படும்.நெல்லிக்காயை மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும்.நெல்லிக்காய் சற்று புளிப்பு தன்மை கொண்டவை என்பதால் அதை உட்கொண்டால் பல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.சிலருக்கு அலர்ஜி,தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் உண்டாகலாம்.

நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.நெல்லிக்காய் சட்னி,நெல்லிக்காய் தேநீர் போன்று செய்து சாப்பிடலாம்.