அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

Photo of author

By Divya

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

Divya

நம் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை காண நேரிடும்.சில வைட்டமின்கள் கம்மியாக இருந்தால் நம் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நம் உடல் கட்டமைப்பிற்கு வைட்டமின் பி12 அவசியமான ஒன்றாக இருக்கிறது.

வைட்டமின் பி 12 நன்மைகள்:

உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உற்பத்திக்கு உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

உடலில் வைட்டமின் பி 12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்:

எலும்பு பலவீனமாதல் பிரச்சனை ஏற்படும்.மன அழுத்த பாதிப்பு அதிகமாகும்.இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படும்.உடலில் அதீத சோர்வு ஏற்படும்.தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.கண் பார்வை பாதிக்கப்படும்.நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

உடலில் ​வைட்டமின் பி 12 அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

1)யோகர்ட்

இதில் வைட்டமின் பி 12 அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.அசைவ உணவுகளைவிட தயிரில் வைட்டமின் பி 12 அதிகம் உள்ளது.

2)பால் பொருட்கள்

பாலில் கால்சியம்,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.பால் மற்றும் பாலில் இருந்து கிடைக்க கூடிய சீஸ்,வெண்ணெய்,நெய் போன்றவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கிறது.

​3)மீன்

கடல் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்திருக்கிறது.இதில் சால்மன் மீனில் வைட்டமின் பி 12 என்ற சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.அடிக்கடி சால்மன் மீனை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் பி 12 கிடைக்கும்.

4)சோயா மற்றும் சோயா பொருள்

பாலுக்கு இணையான கால்சியம்,புரத சத்து கொண்டிருக்கும் சோயாவை உட்கொண்டால் உடலில் வைட்டமின் பி 12 சத்து அதிகமாகும்.

5)காளான் மற்றும் கடல் பாசி

இந்த உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் 12 சத்து அதிகரிக்கும்.