சர்க்கரை நோய்கள் அதிகம் உருவெடுத்தும் நம் நாடு இந்த நோய் பாதிப்பில் முதல் இடத்தில் வகிக்கிறது.பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணம் உணவுமுறை பழக்கம்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் விளைவாக பல நோய்கள் உருவாகிறது.இதில் சர்க்கரை நோய் ஆளையே உருக்கி எடுத்துவிடும் கொடூர நோயாகும்.இந்த பாதிப்பின் கொடூரம் அனுபவித்து வருபவர்களுக்கு மட்டுமே புரியும்.
சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டால் நமக்கு பிடித்த உணவுகளுக்கு டாட்டா காட்டிவிட வேண்டியது தான்.மருத்துவர்கள் சொல்லும் உணவுகளையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை அளவு குறைந்தலோ அல்லது அதிகரித்தலோ ஆபத்து என்னவோ நமக்கு தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.சிலர் நாவை கட்டுப்படுத்த முடியாமல் இனிப்பு உணவுகளை சாப்பிட்டுவிடுவார்கள்.
பிறகு கடுமையான பாதிப்புகளை அவர்கள் சந்திப்பார்கள்.சிலர் சிலவகை உணவுகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று நம்புகின்றனர்.குறிப்பாக கோதுமை உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்பது அனைவரின் மனதில் பதிந்த விஷயமாக உள்ளது.தினமும் கோதுமை சப்பாத்தி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் கோதுமை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கோதுமை மாவில் இருக்கின்ற கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.ஆகவே சர்க்கரை நோயாளிகள் கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி,பூரி,பிரட் போன்ற உணவுகளை மிகவும் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் என்ன உணவுகளை சாப்பிடலாம்?
இனிப்பு குறைவாக உள்ள பழங்களை உட்கொள்ளலாம்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இனிப்பு சேர்க்காத டீ,காபி எடுத்துக் கொள்ளலாம்.சீரகம் கொண்டு தயாரிக்கப்பட்ட பானத்தை பருகலாம்.
கொத்தமல்லி மற்றும் வெந்தயம் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீரை பருகலாம்.முருங்கை கீரை கொண்டு பானம் தயாரித்து பருகலாம்.துவர்ப்பு அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ளலாம்.