கணவன் மனைவி இணைந்து சேமிப்பின் மூலமாக ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதற்கான சிறந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என அழைக்கப்படக்கூடிய monthly income scheme இது இந்தியா அஞ்சல் துறையின் ஒரு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக விளங்குகிறது.
இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சங்கள் :-
✓ பாதுகாப்பான முதலீடு – மத்திய அரசால் வழிநடத்தப்படக் கூடிய அதிக பாதுகாப்பு கொண்ட முதலீடாக இது பார்க்கப்படுகிறது.
✓ இதனுடைய வட்டி விகிதம் 2025 ஆம் ஆண்டில் 7.4% என வருடத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது
✓ எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கில் செலுத்தப்படும்
✓ 5 ஆண்டுகள் கால அளவை கொண்ட இந்த திட்டத்தில் நாம் செலுத்திய முழு தொகையையும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெற முடியும்
✓ இந்த MIS திட்டத்தின் கீழ் தனிநபர் 9 லட்சம் வரையிலும் கூட்டு கணக்கு திறக்கும் பட்சத்தில் 15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.
இத்திட்டத்தினுடைய நன்மைகள் :-
✓ நிலையான வருமானம் தேவை என நினைக்கக்கூடிய குடும்பஸ்தர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நபர்களுக்கு இத்திட்டம் மிகச் சிறந்தது.
✓ முதலீடாக செலுத்தக்கூடிய பணம் முழுவதும் பாதுகாப்பானதாகவும் அதற்கான வட்டியாக நீங்கள் செலுத்தக்கூடிய தொகையின் உடைய பங்கில் இருந்து 7.4% வட்டியும் ஒவ்வொரு மாதமும் சேர்க்கப்படுகிறது
✓ நீங்கள் சேமிக்கக்கூடிய அல்லது முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கோ, அதனால் கிடைக்கக்கூடிய வட்டிக்கோ TDS கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.