அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!!
கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் ,கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அந்தவகையில் விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டது. அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் படையெடுக்க தொடங்கியது அதன் காரணமாக மீண்டும் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் போடப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திரையரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. பொழுது போக்கு அம்சங்களுக்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கும் வசதியும் உள்ளது.அதில் கூடிய விரைவில் உணவு விடுதிகள்,சில்லறை கடைகள் திறக்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரையரங்கை நடிகர்கள் சதீஷ், ஆனந்த் ராஜ், கூல்சுரேஷ், டைரக்டர் வெங்கி மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாண்டி போன்றோர் திறந்து வைத்தனர். மேலும் அங்கு நடன நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டது.