அட இது சூப்பரா இருக்கே! வீட்டில் பெண் குழந்தை இருந்தால் 50000 பணமா?

Photo of author

By Parthipan K

அட இது சூப்பரா இருக்கே! வீட்டில் பெண் குழந்தை இருந்தால் 50000 பணமா?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள் வளம் போலவே மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தினை சமூக நலம் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் ரூ 50 ஆயிரம், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து சேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படுகின்றது.

இந்த சேமிப்பு பத்திரம், 18 வயது நிறைவடைந்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தால் அந்த குழந்தைகளுக்கு மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகையுடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்காமல் இருக்கும் பயனாளிகள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார்.

விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றுதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் முதிர்வு தொகை கேட்டு விண்ணபிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதனை பற்றி மேலும் விவரங்கள் பெற மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும் 0431-2413796 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.