ஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!..

0
163

ஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!..

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள் , காளான் -15, பாஸ்மதி அரிசி – 2 கப், பட்டை – 2, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, முந்திரி – 10, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, தக்காளி – 2, புதினா – 15 இதழ், மல்லித் தழை – கைப்பிடி, மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, மல்லி தூள் – ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தாளிக்க, நெய் – ஒரு தேக்கரண்டி

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம் செய்முறை ,முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.பின் தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கி புதினா மற்றும் மல்லித் தழையை சேர்க்கவும்.நறுக்கிய காளானை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்5 நிமிடம் கழித்து தூள் வகைகளை சேர்த்து தேவையான உப்பை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.பின் குக்கர் பாத்திரத்தில் இந்த கலவையையும், அரிசியையும் சேர்த்து, அரை தேக்கரண்டி நெய், ஒரு பட்டை, சிறிதளவு புதினா, மல்லித் தழை போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.பிரியாணி ஆனதும் அரை தேக்கரண்டி நெய் விட்டு கிளறி எடுக்கவும். சுவையான ஈஸியாக செய்யக் கூடிய காளான் பிரியாணி தயார்.

Previous articleகோவில் வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? தாண்டி செல்ல வேண்டுமா? குழப்பமாக இருக்கிறதா!..?
Next article24-8-2022- இன்றைய ராசி பலன்கள்!