உடலில் தேன்,குளவி,தேனீ,வண்டு போன்ற பூச்சிகள் கடித்தால் அலட்சியம் கொள்ளாமல் இந்த வீட்டு வைத்தியங்கள் செய்து குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
தீர்வு 01:
வேப்பிலை
தேயிலை மர எண்ணெய்
வாணலியில் ஒன்றரை ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவிட்டு வண்டு கடி மீது பூசி வர அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தீர்வு 02:
சமையல் சோடா
தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் சோடா உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளவும்.பிறகு இதை வண்டு கடி மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து அவ்விடத்தை வெது வெதுப்பான நீர் கொண்டு துடைக்கவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் வண்டு கடி பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தீர்வு 03:
மஞ்சள் தூள்
தண்ணீர்
ஒரு கட்டி மஞ்சளை இடித்து தூளாக்கி தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து வண்டுகடி மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தீர்வு 04:
ஆப்பிள் சீடர் வினிகர்
காட்டன் பஞ்சு
முதலில் ஒரு கிண்ணத்தில் 10 மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் நினைத்து வண்டுகடி மீது தடவி வந்தால் அவை ஓரிரு நாளில் குணமாகிவிடும்.
தீர்வு 05:
கற்றாழை ஜெல்
மஞ்சள் தூள்
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து வண்டு கடி மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தீர்வு 06:
குப்பைமேனி இலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
குப்பைமேனி இலையை தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்,அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து வண்டு கடி மீது அப்ளை செய்து வந்தால் சில தினங்களில் அவை குணமாகிவிடும்.