நமது உடலில் ஆங்காங்கே வலி இல்லாத கட்டிகள் உருவாவதை கொழுப்பு கட்டி என்கின்றோம்.இந்த கொழுப்பு கட்டிகள் லிபோமா கட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.இதனை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்தும் வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.
தீர்வு 01:
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு சிறிய தாளிப்பு கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதை அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.
பிறகு இதனை கொழுப்பு கட்டிகள் மீது ஊற்றி தேய்க்க வேண்டும்.இதுபோன்று செய்வதால் கொழுப்பு கட்டிகள் கரையத் தொடங்கும்.
தீர்வு 02:
தேவையான பொருட்கள்:-
1)கொடிவேலி தைலம் – கால் தேக்கரண்டி
2)தூஜா எண்ணெய் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் கால் தேக்கரண்டி கொடிவேலி தைலம் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி தூஜா எண்ணெய் ஊற்றி கலக்குங்கள்.
இதனை கொழுப்பு கட்டிகள் மீது ஊற்றி தேய்க்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் அவை சீக்கிரமாக குணமாகும்.
தீர்வு 03:
தேவையான பொருட்கள்:-
1)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – கால் கப்
செய்முறை விளக்கம்:-
பாத்திரம் ஒன்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த கல் உப்பு நீர் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.அதன் பிறகு காட்டன் துணி ஒன்றை கல் உப்பு நீரில் போட்டு பிழிந்து கொழுப்பு கட்டிகள் மீது வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் கொழுப்பு கட்டி முழுமையாக கரையும்.