“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்!
உணவுக்காக கலெக்டரிடம் மூதாட்டிகள் கெஞ்சிய வருத்தமான நிகழ்வு நடந்துள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் வட்டம் பூலவப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டிகள் மூன்று பேர், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு தனக்கான மனு பதிவு செய்யும் இடத்தில் சோகமாக நின்றிருந்த மூதாட்டுகளிடம் கோரிக்கை என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி” என்று வேதனையுடன் சென்னார்.
நாங்க ரேசன் கடையில கேட்ட அரிசி தரமாட்றாங்க சாமி என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
முதியோர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்களுக்கு ரேசன் கடையில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச அரிசிக்காக பலமுறை எழுதிய மனுவை மூதாட்டிகள் கையில் வைத்திருந்தனர். இதுகுறித்து நாகம்மாள் மூதாட்டி கூறுகையில்; எங்கள் கிராமத்தில் ரேசன் அரிசியை கேட்டோம் தரவில்லை, இதனால் கலெக்டரிடம் முறையிட்டோம் நிச்சயமாக நாளையில் இருந்து அரிசி கிடைக்கும் என்று கூறியுள்ளார். எங்களுக்கு கிடைக்கும் 1000 ரூயாப் உதவிக் தொகையிலும் இலவச அரியில்தான் எங்கள் வாழ்க்கையே ஓடுகிறது என்று வேதனையுடன் கூறினார்.
இதனையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலரான குமரேசன் கூறுகையில்; முதியோர் உதவித்தொகையை புதிதாக வாங்குபவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். முறைப்படி பதிவு செய்தவர்களுக்கு இலவச அரிசி எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும் என்றும், மனு சம்பந்தபட்ட மூதாட்டிகள் பதிவு செய்யாமல் ஸ்மார்ட்கார்டு மூலம் அரிசி கேட்டுள்ளனர். மேலும், மூதாட்டிகளுக்கு தேவையான இலவச அரிசிக்கான வழிமுறை செய்யப்பட்டுள்ளது என உறுதியளித்தார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டத்தில் இதுபோன்ற அப்பாவி மக்கள் பல்வேறு கோரிக்கையுடன் காத்துகிடப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.