ஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!!
இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர்.
அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை.
மேலும், இந்த ஐபோனில் புதிய மாடல்கள், பழைய மாடல்கள் எதுவாக இருந்தாலுமே ஐபோன் என்றாலே பெரிதாக கருதி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மாதம் முப்பதாம் தேதி ஐபோன் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டது.இந்த ஐபோன் தான் ஆப்பிள் நிறுவனத்தால் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாடல் ஆகும்.
இந்த ஐபோன் வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களிலேயே முற்றிலுமாக உற்பத்தி செய்யப்பட்டது. மேலும், இந்த ஐபோன் வெளியிடப்பட்ட புதிதில் சுமார் 499 டாலருக்கு விற்பனை ஆனது.
தற்போது, பதினாறு வருடங்களுக்குப் பிறகு இந்த ஐபோன் ஆனது ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 644 டாலர் மதிப்பிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.இது இந்திய மதிப்பில், ஒரு கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 683 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பழைய மாடல் போனிற்கு இவ்வளவு விலையா அப்படி என்ன இதில் சிறப்பம்சங்கள் இருக்கிறது என்று அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
ரஷிய நாட்டில் அரசு அதிகாரிகள் இந்த ஆப்பிள் ஐபோனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.