ஓமவல்லி அதாவது கற்பூரவல்லி இலை அதிக மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும்.இவை சித்த மருத்துவத்தில் சளி,இருமல் போன்ற பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ஓமவல்லி இலையில் அடங்கியுள்ள வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க உதவுகிறது.வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்களுக்கு சிறந்த நிவாரணம் வழங்குகிறது.ஓமவல்லி இலை சாறு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.நார்ச்சத்து நிறைந்து காணப்படும் ஓமவல்லி இலையில் தினமும் டீ செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.
ஓமவல்லி இலையில் சிரப் செய்து குடித்தால் தலைபாரம்,தலைவலி,வறட்டு இருமல்,சளி உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஓமவல்லி இலை – ஐந்து
2)ஏலக்காய் – ஒன்று
3)கிராம்பு – ஐந்து
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஐந்து ஓமவல்லி இலைகளை பறித்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் இந்த ஓமவல்லி சாறை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு ஐந்து கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காயை பொடித்து ஓம்வல்லி சாறில் கொட்டி கலந்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த சிரப்பை ஆறவைத்து ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து குடித்தால் சளி,தலைவலி,தலைபாரம்,இருமல் போன்றவை குணமாகும்.
ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலிவிடும்.ஓமவல்லி இலையை அரைத்து 100 மில்லி தண்ணீர் கலந்து குடித்தால் நெஞ்சு சளி பாதிப்பு குணமாகும்.ஓமவல்லி இலையில் டீ போட்டு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
ஓமவல்லி இலை சாறு சிறுநீரகத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றி அந்த உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.