நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கொழுப்புகளின் ஒன்று தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்.உடலில் நல்ல கொழுப்பு,கெட்ட கொழுப்பு என இருவகை இருக்கிறது.இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும்.உடல் பருமன்,நீரிழிவு நோய்,இதய அடைப்பு,பக்கவாதம் போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
ஆனால் உடலில் நல்ல கொழுப்பு சேர்ந்தால் அது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.இந்த நல்ல கொழுப்புகளில் ஒன்று தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்.
இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது DHA,EPA மற்றும் ALA போன்றவற்றில் இருந்து நமக்கு கிடைக்கிறது.அதாவது உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களில் இருந்து DHA என்ற கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.மீன்களில் இருந்து EPA என்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.
அதேபோல் தாவரங்களில் இருந்து ALA என்ற கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.நாம் ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை எடுத்துக் கொண்டால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்கிறது.அதேபோல் சருமம் மற்றும் முடி பராமரிப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் பங்கு இன்றியமையாதது.கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் பங்கு அவசியமான ஒன்றாக உள்ளது.
கண் பார்வை குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்:
1)கடல் மீன்களில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.அதேபோல் சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.
2)ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உலர் விதையான வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.
3)சோயா பீன்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்திருக்கிறது.கிட்னி பீன்ஸில் அமிலம் நிறைந்திருக்கிறது.
4)கடுகு எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.இந்த பொருட்களை உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.