தயவுசெய்து இதில் தீவிரம் காட்டுங்கள்! முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!

Photo of author

By Sakthi

புதிய வகை நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது, உள்ளிட்ட மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த 3ல் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உள்ளிட்டவை கடைபிடிக்க படுவதாக எனக்கு தெரியவில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பெசன்ட் நகர் கடற்கரையிலும், தியாகராய நகர் ரங்கநாதன் தெருவிலும், காசிமேட்டில் இருக்கின்ற கூட்டத்தின் புகைப்படங்களை பார்த்த போது பெரும்பாலான நபர்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பது நன்றாக தெரிந்தது. முகக் கவசம் அணிந்திருப்போரும் அதிகமானோர் அரைகுறையாக அணிந்திருந்தார்கள். சமூக இடைவெளி என்பது முற்றிலுமாக காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது என்பதை ஆணித்தனமாக தெரிகிறது என கூறியிருக்கிறார்.

இதனால்தான் தமிழகத்தின் புதிய வகை நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது, இதன் விளைவு நாட்டில் இருக்கின்ற மாநிலங்களில் தமிழகம் 6வது இடத்திற்கு வந்துவிட்டது. நோய் வந்த பின்னர் காப்பதற்கு பதிலாக வருமுன் காக்கும் விதத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும், முகக்கவசம் அணிவதையும், 100 விழுக்காடு கண்டிப்புடன் அமல் படுத்துவதில் சமூக இடைவெளி விட்டு அவற்றை கடைப்பிடித்தாலும் கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

புதிய வகை நோய்த்தொற்றை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி நாம் எல்லோரும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், எச்சரிக்கையுடனும், இருக்க வேண்டும். இதனை உலக சுகாதார அமைப்பின் அறிவியல் அதிகாரி வலியுறுத்தியதுடன் புதிய வகை நோய் தொற்று பரவும் ஆபத்தான இடங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

புதிய வகை நோய் தொற்று மக்கள் பெரும்பாலாக இருக்கின்ற பகுதிகளில் வேகமாக பரவுவதன் காரணமாக, புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை தமிழக அரசு பொது மக்களிடம் எடுத்துச் சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோர் ,செலுத்தாமல் இருப்போர், என்று எல்லோரும் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உள்ளிட்டவற்றில் 100% சமூக இடைவெளியை கடைபிடித்தலை உறுதி செய்ய வேண்டும் என்பதும், புத்தாண்டை முன்னிட்டு ஆங்காங்கே மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதும், மருத்துவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆகவே புதிய வகை நோய் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில் மக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடை பிடித்தலையும், ஆங்காங்கே பொதுமக்கள் ஒன்றுகூடுவதையும் தடுப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருக்கிறார்.