வெகு விரைவில் நாம் அந்த இடத்திற்கு வந்து விடுவோம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி!

0
63

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் பதிவாளர் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் அதை பேராசிரியர் கவுன்சில் சார்பாக ஒவ்வொரு வருடமும் சிறந்த செவிலியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க படும் சென்ற ஆண்டு நோய்த்தொற்று பரவல் தீவிரம் காரணமாக விருது வழங்கும் விழா நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது இந்த சூழ்நிலையில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சிறந்த செவிலியர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழக செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் கவுன்சிலின் பதிவாளர் எஸ்.ஆனி.கிரேஸ் கலைமதி தலைமை தங்கியதாக சொல்லப்படுகிறது. சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார், கவுன்சிலின் உறுப்பினர் சேகர் வரவேற்று உரையாற்றினார். துணைத் தலைவர் எஸ்.ஆனி.ராஜா நன்றி உரை தெரிவித்தார்.

நோய் தொற்று பரவும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நேரடியாக களத்தில் இறங்கி துணிச்சலுடன் பணிபுரிந்த உங்களுக்கு விருது வழங்குவது மிகவும் பெருமையாக உள்ளது, கடந்த 2015 ஆம் வருடம் வெள்ள பாதிப்பின் போது நான் சிட்கோ நகரில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்தேன் அப்போது இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்த அந்தப் பெண்ணிடம் யார் அம்மா நீங்கள் என்று கேட்டேன், அவர் திருவண்ணாமலை கிராமப்புற சுகாதார நிலையத்தில் இருந்து மாற்றுப் பணிக்காக வந்திருக்கின்றோம்.

இங்கே மாடி வீடுகளில் வசிக்கும் முதியோர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக இன்று தண்ணீரில் சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். தற்சமயம் அந்த அம்மாவின் கைப்பேசி எண் என்னிடம் உள்ளது எப்படி இந்த தடுப்பூசியை விரிவுபடுத்தலாம்? எப்படி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு செல்லலாம்? என்று அந்த அம்மா யோசனை கொடுப்பார்கள் செவிலியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவே நான் இதனை சொல்கிறேன் என கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.