அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்று! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!

Photo of author

By Sakthi

கொரோனா தொற்றை அடுத்து தற்சமயம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கின்ற ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரையில் இந்தியாவில் 35 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் மத்திய அரசு சார்பாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதேபோல நாட்டில் இருக்கின்ற எல்லோரும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் அது ஒன்றுதான் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழி என்றும் மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரம் தமிழகத்தில் புதிய வகை நோய் தொற்று இதுவரையில் யாருக்கும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் இந்த நோய் தொற்று உண்டாகி இருப்பது கவலை அளிக்கிறது. கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட பகுதிகளில் இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டது. அதனை அடுத்து தற்சமயம் ஆந்திர மாநிலத்திலும் இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது இதனால் தமிழக அரசு உஷார் ஆகி உள்ளது.

ஆகவே நாடு முழுவதும் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் வருடத்திற்கு வருடம் உருமாறி உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றது. அதனடிப்படையில் தற்சமயம் புதிதாக உருமாறி இருக்கின்ற நோய்த்தொற்றுக்கு ஒமிகிரான் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வகை நோய் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைத்து வேகமாக பரவக்கூடியது எனவும், சமூக பரவலாக உருவெடுத்து அதற்கான அனுமதியை நாம் வழங்கினால் டெல்டா வைரசை விட வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 24ஆம் தேதி முதல் 19 நாட்களில் குறைந்தது 60 உலக நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு உண்டாகி இருக்கிறது. இந்தியாவிலும் வேகமாக இந்த புதிய வகை நோய் தொற்று பரவி வருகிறது. தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து தற்சமயம் ஆந்திரா மற்றும் கேரளாவிலும் இந்த நோய்த் தொற்று பரவியிருக்கிறது.

நேற்று முன்தின நிலவரத்தின் அடிப்படையில் 33 பேருக்கு இந்த நோய் பற்றி உறுதியான சூழ்நிலையில், நேற்று தமிழகத்தின் அண்டை மாநிலமா ஆக இருக்கும் கேரளா மற்றும் ஆந்திராவில் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அயர்லாந்தில் இருந்து ஆந்திரா வந்த 34 வயது வெளிநாட்டு பயணிக்கும், இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அயர்லாந்தில் இருந்து மும்பைக்கும் விமானம் மூலமாக வந்து இறங்கியபோது பரிசோதனை செய்ததில் அந்த பயணிக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில், விஜயநகரத்தில் இரண்டாவது முறையாக ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருடைய சளி மாதிரி ஹைதராபாத்தில் இருக்கின்ற செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக ஆந்திர மாநில சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது.

கேரள மாநிலத்திற்கு இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த எர்ணாகுளத்தை சார்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கேரள மாநில சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. அந்த நபரின் மனைவி மற்றும் தாயாருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல இத்தாலியில் இருந்து சண்டிகர் மாநிலத்திற்கு வந்த 20 வயது இளைஞருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று தொடர்பாக உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்த அவருக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதன்பிறகு அவருடைய சளி மாதிரி உள்ளிட்டவற்றை எடுத்து மரபணு பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 3 பேருக்கும், கேரளா மற்றும் ஆந்திரா அதோடு சண்டிகர் மாநிலத்தில் ஒருவருக்கும் என்று இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 38 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் இந்த புதிய வகை நோய் தொற்று பரவி இருக்கின்ற சூழ்நிலையில், தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. நோய்த்தொற்று கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பு, உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ உயரதிகாரிகளுடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை செய்ய இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.