ஒமைக்ரான் பாதிப்பு! சீனாவை போன்று இந்தியா மாறுமா? நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்
ஒமிக்ரான் துணை வைரசால் பாதிப்பு ஏற்படுமா?? என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தற்போது ஒமிக்ரான் துணை வைராஸான BF.7 அதிவேகமாக பரவத்தொடங்கிய நிலையில் ஜப்பான், அமெரிக்கா, பிரேசில்,தென்கொரியா ஆகியவற்றிலும் அதிகளவில் பரவத்தொடங்கி உள்ளன.
இது வைரஸ் பி.ஏ.1.2.5.7 வைரஸ் போன்றது தான் என்றாலும் இது அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது. பல நாடுகளில் பரவி விட்ட இந்த வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் குஜராத்தில் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் கண்டறிந்துள்ளது.
மேலும் ஒடிசாவில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.நேற்று வரை 3 பேரை பாதித்த நிலையில் மேலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.குஜராத்தில் இரு நோயாளிகளும் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
10 வகை கொரோனா உள்ள நிலையில் தற்போது உள்ள வகை பி.எப்.7 இது குறுகிய அடைகாக்கும் திறனை கொண்டது.தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தகூடியது.சீனாவில் இந்த வைரஸால் இலட்சக்கணக்கான பேர் அடுத்து வர மாதங்களில் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லபடுகின்ற வேளையில் இந்தியாவில் நிலைமை அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதற்கான காரணங்கள்:
1.இந்த வைரஸ் பிப்.5-இன் துணை வரிசை. எனவே பி.ஏப்.7 ஒரு புதிய மாறுபாடு அல்ல.
2.இந்தியாவில் சார்ஸ்-கோவ்-2 – இன் 10 வெவ்வேறு வகைகள் உள்ளன.பிஎப்.7 அவற்றில் சமீபத்தியது. இரண்டாவது தொற்றுஅலையை உருவாக்கிய டெல்டா வைரஸ் இன்னும் இந்தியாவில் உள்ளது.
3. ஒமிக்ரான் வகைகளில் இது அதிக தொற்றுத்திறன் இதனால் பாதிக்கப்பட்ட நபர் 10 முதல் 18 நபர்களுக்கு பரப்பலாம்.
சராசரி இனப்பெருக்கம் 10 முதல் 18.6 வரை கொண்டுள்ளது.ஒமிக்ரானுக்கு சராசரி 5.08 ஆகும்.
மேலும் மத்திய அரசு எச்சரிக்கையின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றது.மாநிலங்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளன.சர்வதேச பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தபட்டு வருகிறது.
கடந்த மாதம் வரை சீனாவில் பொது முடக்கம் இருந்ததால் நோய் எதிர்ப்பு உருவாகாததால் சீனாவின் நிலை வேறு.மற்றொரு முக்கிய காரணி சீனாவின் தடுப்பூசி, சீன மக்களே அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியாவில் ஜூலை மாதத்தில் பி.எப்.7 கண்டறியப்பட்டு விட்டாலும் தினசரி, மற்றும் வாராந்திர பாதிப்புகளும் அதிகரிக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட 4 நபர்களும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.
இந்தியாவில் உள்ள கொரோனா நிலை மற்றும் 3-வது தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவாக இந்திய எந்த புதிய அலையையும் காண வாய்ப்பு இல்லை எனவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது எனவும் உயர் சுகாதார அதிகாரிகள் கருதி வருகின்றனர்.