பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஓமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?
கொரோனா தொற்றானது தனது இரண்டு அலையின் போதும் அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி பெரும் இழப்பை தந்தது. அதனையடுத்து டெல்டா வகை தொற்று என ஆரம்பித்து தற்பொழுது ஒமைக்ரான் தொற்று வைரஸ் என்பது வரை பரவி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த ஒமைக்ரான் தொற்று வைரஸ் பெருமளவு ஆதிக்கம் கொண்டு மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் இத்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் உடனுக்குடன் மற்றவருக்கு பரவும் விதத்தில் கொரோனா தொற்றை விட பல மடங்கு ஆபத்து கொண்டதாக இது உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ள இடங்களில் ஓமைகரான் தொற்று பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் திறக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு ஒருவருக்கு உறுதி ஆகிய உடன் நான்கு மணி நேரத்திற்குள் ஒமைக்ரான் தொற்று பரிசோதனை எடுத்து அதன் முடிவுகள் வரும் வகையில் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்கப்பூரிலிருந்து வந்த 477 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்ற முடிவுகள் வெளிவந்தது.
இந்நிலையில் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த சிறுமிக்கும் தற்பொழுது தொற்றானது உறுதியாகி உள்ளது. உடன் பயணித்த மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து வந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பதால் அதற்கு அடுத்ததாக ஒமைக்ரான் பரிசோதனை தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியை சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமை படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அச்சிறுமியின் மாதிரியை மரபணு சோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளதாக மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.