வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மூன்று மாதத்திற்குள் இதை செய்தால் பலன் அடையலாம்! நீங்கள் செய்தீர்களா?

0
86
Those who fail to renew their job can benefit if they do this within three months! Did you?
Those who fail to renew their job can benefit if they do this within three months! Did you?

வேலை வாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மூன்று மாதத்திற்குள் இதை செய்தால் பலன் அடையலாம்! நீங்கள் செய்தீர்களா?

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் படித்தவர்கள் பதிவு செய்வதன் மூலம் அரசுக்கு எவ்வளவு பேர் படித்துள்ளோம் என்று தெரியும். மேலும் அரசு வேலை இல்லாதவர்களுக்கு அரசு சிறு உதவி தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கென பிரத்யேக தொழிற் கூடங்களின் சிறப்பு நேர்காணலையும் அமைத்து தருகிறது. தேவை படுவோர் இதன் மூலம் பயனடையலாம். ஆனால் மறக்காமல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் கிர்லோஷ் குமார் தற்போது ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த நபர்கள் தங்களது பதிவுகளை புதுபிக்காத வகையில் அதாவது 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மட்டும் 48 லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்கள் பயனடையும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

மேலும் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கனவே மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த அவகாசத்தை பயன்படுத்தாத நபர்கள் இன்னும் சற்று காலம் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை அரசு ஏற்றது.

அதன் காரணமாக மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது என்றும், அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் வைத்த கருத்துக்களை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது.

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இந்த கடந்த ஆறு வருடங்களில் அதாவது மேற்சொல்லப்பட்ட ஆறு வருடங்களில் வேலைவாய்ப்பை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என்றும், கடைசி மூன்று வருடங்களில் பதிவு செய்த நபர்களுக்கு கடந்த மே மாத அரசாணைப்படி வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்து உள்ளது.

ஆனால் இன்னும் மூன்று மாதங்களுக்கு இவர்களுக்கும் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார். இந்த சலுகையை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்படும் 02.12.2021 இன்று அதாவது இந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இந்த பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், இந்த சலுகை இந்த இந்த முறை மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இந்த மூன்று மாதங்களுக்கு கடந்த பின் வரும் எந்த கோரிக்கையும் அரசு ஏற்காது என்றும், தெரிவித்துள்ளது. இந்த அரசாணை அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையங்களின் தகவல் பலகையில் மக்களுக்காக காட்சிப் படுத்தப் படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.