மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!!
திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளனதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி வழியாக கம்பம் நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் அருகே உள்ள சிறுவை பகுதியைச் சேர்ந்த தங்கமணி வயது 45 , என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்த சூழ்நிலையில் அந்த பஸ் இன்று காலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்துள்ள மரவனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பாலக்கட்டையில் மோதி மீண்டும் அங்கிருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ்வரி வயது 25, செல்வ ராஜ் வயது 55, வேல்முருகன் வயது 55, சுருளிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் வயது 63, வேல்மணி வயது 47, காளியம்மாள் வயது 77, ஆகிய 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினை பார்த்தவர்கள், தகவல் அறிந்ததும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் மோதியதால் அங்கிருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.