அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு!!

0
155
Due to high number of passengers, the fare of omni buses has suddenly increased!!
Due to high number of passengers, the fare of omni buses has suddenly increased!!

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் கழித்துவிட்டு பள்ளிகள் திறக்கும்போதுதான் சென்னைக்கு வருவார்கள்.

இதனால் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு மே மாதம் முழுவதும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் ஊருக்கு செல்பவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளைத்தான் நம்புகின்றனர்.

இன்று மே தினத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள்  தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த வெள்ளியன்று ஊருக்கு செல்ல மிகவும் அதிகமான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்தனர்.

ஆனால் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் அரசு பேருந்தில் இருக்கைகள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் இவர்கள் ஆம்னி பஸ் நிலையத்திற்கு சென்றனர். திடீரென அதிகரித்த பயணிகளின் கூட்டத்தால், ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கான கட்டணம் ரூ. 3500 வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனை பற்றி பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது. கோடை விடுமுறையில் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூடுதலாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  இயக்கப்படுகின்றன.

பயணிகளின் வருகைகேற்ப உடனுக்குடனும் பேருந்துகள் ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி  வைக்கிறோம். ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ள போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என சோதனைகள் நடத்தப்பட்டு தான் வருகிறது. அமைச்சர் தலைமையில் பஸ் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வு தடுக்கப்படும் என போக்குவாத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous articleசேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
Next articleமாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்!