தமிழகத்தில் தொடங்க உள்ள ஆம்னி பேருந்துகளின் இயக்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

குரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை தடைபட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன.

இந்த காரணத்தால் பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிக்கும் முடியாமல் கடுமையான சிக்கலுக்கு ஆளாகி வந்தனர்.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரை பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான இயக்கத்திற்கு e- pass வழங்கப்பட்டு வந்தது என்பதும் நாம் அறிந்ததே.

தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் பொது முடக்கமானது வருகின்ற 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகத்தில் e- பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் எடுத்து வைத்தனர். மேலும் தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment