அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

Photo of author

By Rupa

அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

Rupa

On behalf of the AIADMK, a consultation meeting was held under the leadership of the city secretary of Periyakulam!
அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக சார்பில் பெரியகுளம் நகர செயலாளர் அப்துல் சமது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வரும் அதிமுகவினுடைய இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ .பன்னீர்செல்வம் அவர்களுடைய வழிகாட்டுதலின்படியே செயல்படுவோம் என்றும், அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் அனைவரும் கட்டுப்பட்டு சிறப்பாக செயல்படுவோம் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தேனியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் .பி .உதயகுமார் கலந்து கொள்ள கூடிய சூழ்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.