ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார் செயல்பட தடை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார் செயல்பட தடை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.அதன் காரணமாக மதுப்பிரியர்கள் கிருமி நாசினியில் ஆல்கஹால் கலந்துள்ளது என குடித்து ஒரு சிலர் உயிரை மாய்த்து கொண்டனர்.

அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்தது அதனால் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.மேலும் தமிழகத்தில் ஏதேனும் அரசு விழாக்கள்,தலைவர்கள் நினைவு தினம் மற்றும் பிறந்தநாள் போன்ற தினங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

அந்த வகையில் கடந்த ஐனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.அதனை தொடர்ந்து ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு மதுபான கடைகளில் ரூ 80 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அனைத்துவிதமான பார்களும் வருகிற 5 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவை மீறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.